தமிழன் கெத்து

Bill Gates organized an enormous session to recruit a new Chairman for
Microsoft Europe.

5000 candidates assembled in a large room.

One particular candidate is our தமிழன் ராமசாமி.

Bill Gates: Thank you for coming.

“Those who do not know JAVA may leave the room...”

So immediately 2000 people left the room.

Ramasaamy says to himself,

'I do not know JAVA, but I have nothing to lose if I stay. I'll give it a
try !'

Bill Gates: Candidates who never had experience of managing more than
100 people may leave.

So immediately 2000 people Left the room.

Ramasaamy says to himself

'I never managed anybody by myself, but I have nothing to lose if I
stay. What can happen to me ?' So he stays.

Bill Gates: Candidates who do not have management diplomas may leave.

So immediately 500 people Left the room.

Ramasaamy says to himself,

'I left school at 15, but what have I got to lose ?' So he stays in the
room.

Finally,

Bill Gates asked the candidates who do not speak Serbo-Croat to leave.

So calmly 498 people left the room

Ramasaamy says to himself,

'I don’t even know to speak even any one word of Serbo-Croat but what
do I have to lose ?' So he stays and finds
himself with one other candidate; Everyone else has gone.

Bill Gates joined them and said

'Apparently you are the only two candidates who speak Serbo-Croat
language, so I'd now like to hear you people have a conversation together in that language.'

Calmly, Ramasaamy turns to the other candidate and says
'எந்த ஊரு??'

The other candidate answers… ' ஈரோடு பக்கம் !!!!'

2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்

http://heroes.cnn.com/vote.aspx

2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்
திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக , தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.

இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக, மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.

பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29
இருப்பு : மதுரை

அப்படி என்ன செய்து விட்டார்?
அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.

தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார். அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.

ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார். இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்” என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் ” நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்” என்று சொல்லிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட.

நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரி கொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா? அவர்கள் என்ன செய்தார்கள். நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள். இவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம் செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை. எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரை பார்க்கவும், இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும், இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும், பொருள் உதவி செய்யவும், இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல் கொள்கிறேன், பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன் என்பதில்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.

இதுவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில் பரவலாக வரவில்லை என்பது பெருத்த வேதனை மட்டுமல்ல ஒரு தமிழனாக நம் எல்லோருக்கும் அவமானம். இதை பதிவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்க வேண்டும்.

கவியரசு கண்ணதாசனின் ஆறு கட்டளைகள்

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி!
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி!

சொல்லுக்குச் செய்கை பொன்னாகும், வரும்
இன்பத்தில் துன்பம் பட்டாகும் – இந்த
இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்!

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்! – நிலை
உயரும்போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்!

உண்மை என்பது அன்பாகும் – வெரும்
பணிவு என்பது பண்பாகும் – இந்த
நான்கு கட்டளைகள் அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்!

ஆசை, கோபம், களவு கொள்பவன்
பேசத் தெரிந்த மிருகம்!
அன்பு, நன்றி, கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம்!

இதில் – மிருகம் என்பது கள்ளமனம்
உயர் – தெய்வம் என்பது பிள்ளைமனம்
இந்த – ஆறு கட்டளை அறிந்தமனது
ஆண்டவன் வாழும் வெள்ளைமனம்!

பணவீக்கம் என்றால் என்ன?



சமீபகாலமாக பொதுமக்களையும், கம்பெனிகளையும், அரசாங்கத்தையும் பாடாய்ப்படுத்தி வருவது பணவீக்கம் என்ற ஆறு எழுத்துக்கள் தான். தற்போது, 10 சதவீதத்தையும் தாண்டி பந்தயக்குதிரை போல சென்று கொண்டிருக்கிறது. எங்கு சென்று நிற்கப்போகிறது? மறுபடி பழைய நிலையான 3 அல்லது 4 சதவீத அளவு வருமா? பொருட்களின் விலை குறையுமா? இரண்டு பேர் சந்தித்துக் கொண்டால் கேட்கும் கேள்விகள் இது தான். பணவீக்கம் குறைய பொதுமக்களின் பங்கும் நிறைய இருக்கிறது. பணவீக்கத்தைக் குறைக்க என்ன செய்யலாம். கூடிவரும் பணவீக்கத்தில் செலவுகளை சமாளிப்பது எப்படி? பணவீக்கம் என்பது சில சமயம் ஜலதோஷம் போலத்தான். ஜலதோஷம் வந்தால் என்ன செய்வோம், அப்படியே விட்டுவிடுவோம். அது சில நாட்கள் கழித்து சரியாகிவிடும். அதுபோல சிறிய அளவு பணவீக்கம் இருந்தால் அது தானாக சரியாகி விடும். ஆனால், அதே ஜலதோஷம் பல நாட்கள் கூடுதலாக இருந்தால், அதுவே சளியாக மாறி நுரையீரலில் தங்கினால் ஆபத்தாகி விடும். அது போல ஒரு சூழ்நிலை தான் பணவீக்கத்தால் தற்போது உருவாகியுள்ளது. அரசாங்க வைத்தியர்கள் மருந்து கொடுத்தும் சரியாகவில்லை.


பணவீக்கம் 10 சதவீதம் என்றால் என்ன? : அதாவது சென்ற வருடம் 100 ரூபாய்க்கு வாங்கிய பொருள், தற்போது, 110 ரூபாய் அளவில் கிடைக்கிறது என்பது சிம்பிளான அர்த்தம். ஆனால், அதுபோல கிடைக்கிறதா என்றால் இல்லை. வீட்டு வாடகை கிட்டத்தட்ட 50 சதவீதம் உயர்ந்திருக்கிறது, ஓட்டல்களில் விலை 33 சதவீதம் உயர்ந்திருக்கிறது, காய்கறிகள், பழங்கள் 50 சதவீதத்திற்கும் மேலே கூடியுள்ளன. கூடும் பணவீக்கத்திற்கு தான் பஞ்சப்படி அதிகம் கிடைக்கிறதே என்று பலரும் நினைக்கலாம். அதெல்லாம், அரசாங்கம் கொடுக்கும் யானைப்பசிக்கான சோளப்பொரிதான் அது.


தமிழக மக்களுக்கு சேமிப்பு பற்றி சொல்லித் தர வேண்டிய அவசியமேயில்லை. ஆயிரம் ரூபாய் சம்பாதித்தால் கூட அதிலேயே 50 ரூபாய் சேமிப்பவர்கள் தமிழர்கள். ஆனால், சமீபகாலமாக இந்தப் போக்கு மாறிவருகிறது. சேமிப்பு பணத்தில் மட்டுமல்ல, மற்ற விஷயங்களிலும் தேவை. எந்த வகையில் செலவுகளை கட்டுப்படுத்தலாம், சேமிக்கலாம் என்று பார்க்கலாம். காய்கறி, மளிகை சாமான்கள்: நமது மாதாந்திர பட்ஜெட்டில் முக்கியமாக இடம் பெறுவது காய்கறி, மளிகை சாமான்கள் தான். அதில், மிச்சம் பிடித்தாலே நிறைய ரூபாய் சேமிக்க முடியும். அந்தக் காலத்தில் ஐந்து ரூபாய் வரை கொண்டு சென்றால் பை நிறைய காய்கறிகள் வாங்கிவரலாம் என்று அப்பா சொல்வார். ஆனால், தற்போது 100 ரூபாய் கொண்டு சென்றாலும் பை நிறைய மாட்டேன் என்கிறது.


என்ன செய்வது? : பணம் சம்பாதிக்கிறேன் என்று வாழ்க்கையை தொலைத்து விட்டோம் என்று தான் பல சமயம் நினைக்கத் தோன்றுகிறது. முன்பெல்லாம், காலை எழுந்தவுடன் முதல் வேலை காய்கறி வாங்கச் செல்வது தான். தற்போது, அதிகாலையில் எழுங்கள் என்று சொன்னாலே அது ஏதோ குற்றம் என்பது போல பலர் பார்க்கின்றனர். ஆதலால், அதிகம் சம்பாதிப்பதால் சோம்பேறித்தனப்பட்டு, விலை சிறிது அதிகம் இருந்தாலும், காய்கறிகள் அருகில் உள்ள கடைக்காரரிடம் சென்று வாங்கினால் போதும் என்று தான் நினைக்கிறோம். இதில், தினம் மூன்று ரூபாய் கூடுதலாகக் கொடுக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். மாதத்திற்கு 90 ரூபாய். வருடத்திற்கு 1080 ரூபாய்.இதையே, 25 வருடங்கள் என்று வைத்துப் பார்த்தால் வட்டி வட்டிக்கு என்று எல்லாம் போட்டுப் பார்த்தால் எவ்வளவு வரும் தெரியுமா? கிட்டத்தட்ட ஒரு மூன்று லட்ச ரூபாய்க்கு மேலே வரும். மயக்கம் போட்டு விடாதீர்கள். நடந்து சென்று அருகில் உள்ள மார்க்கெட்டில் வாங்கினால் பர்சுக்கும் நல்லது. உடம்புக்கும் நல்லது. பிளாட்டில் குடியிருப்பவர்களில் வாரம் ஐந்து பேர் வீதம் சேர்ந்து, மொத்தமாக காய்கறி, மளிகை சாமான்கள் விற்கும் இடங்களுக்கு சென்று அவர்களுக்கு தேவையான, காய்கறிகளை, மளிகை சாமான்களை மொத்தமாக வாங்கி பகிர்ந்து கொள்வார்களேயானால், அது செலவை மிகவும் குறைக்கும்.


கார் பயணங்கள்: தற்போது வசதி வாய்ப்புக்கள் கூடியுள்ளதாலும், வீட்டில் இரண்டு பேரும் வேலை பார்ப்பதாலும், பெரும்பாலும் எல்லாரும் கார் வைத்திருக்கின்றனர். கார்களில் அலுவலகங்களுக்கு செல்வதை ஒரு பெருமையாகவும், அதே சமயம் தேவையாகவும் கருதுகின்றனர். அதுபோல, கார்கள் வைத்திருப்பவர்கள் ஒன்று சேர்ந்து, கார் பூல் அமைத்து, தினம் ஒரு காரை உபயோகித்தோ அல்லது ஒருவரின் காரை உபயோகித்தோ செலவுகளை பகிர்ந்து கொள்ளலாம். இது நிறைய பணத்தை மிச்சப்படுத்தும். ஆடைகளைப் பொறுத்தளவில், ரெடிமேட் தான் எடுப்பேன் என்றால், பேப்பர்களில் வரும் தள்ளுபடி விற்பனைகளை கவனித்து, எதில் நல்ல டிஸ்கவுன்ட் கிடைக்கிறது என்று பார்த்து வாங்குங்கள்.


எப்படியாவது கஷ்டப்பட்டு நகரின் ஒதுக்குப்புறத்திலாவது ஒரு வீடு வாங்கி விடுவது என்று முடிவெடுத்து, அதற்கு கடன்கள் எல்லாம் வாங்கி இருப்பீர்கள். அந்த கடன்களுக்கான வட்டிகள் கூடிக்கொண்டே செல்கிறது. எப்படி குறைப்பது என்று தெரியாமல் பல சமயம் விழிக்க வேண்டியிருக்கும். அதாவது, வீட்டுக்கடன் வட்டி விகிதங்கள் இரண்டு வழிகள் இருக்கிறது. ஒன்று பிக்சட் வட்டி, இரண்டாவது பணவீக்கத்திற்கு தகுந்தபடி மாறிக் கொண்டிருக்கும் வட்டி. கையில் அதிகப்படியாக பணம் இருக்குமானால், கடனில் பகுதியை யோ அல்லது முழுமையாகவோ குறைப்பது மிகவும் நல்லது.


ஷேர் ஆட்டோ டிரை பண்ணிப்பாருங்கள். இல்லாவிடில் டவுன் பஸ் தான் பெஸ்ட். செல்லும் இடத்திற்கு 10 நிமிடம் முன்னதாகவே புறப்பட்டால் செலவு குறைவான வழியில் அந்த இடத்தை சென்றடைந்து விடலாம். வெளியில் சாப்பிட்டுக்கிறேன்: இன்றைக்கு நான் வெளியில் சாப்பிட்டுக்கிறேன் என்ற வார்த்தைகள் உங்கள் மனைவியை சிறிது மகிழ்ச்சிப்படுத்தலாம், ஆனால், உங்கள் பர்சை மகிழ்ச்சிப்படுத்தாது. ஆபிசிற்கு சென்ற உடனேயே வெளியில் சாப்பிட நண்பர்களை தயார்படுத்துவீர்கள். எல்லாரையும் கூட்டிச் செல்லும் பட்சத்தில் பல சமயங்களில் எல்லாரும் செலவைப் பகிர்ந்து கொண்டாலும், சில சமயங்களில் நீங்களே எல்லார் செலவையும் ஏற்கும் படியாகி விடும். இன்றைக்கு அல்ல என்றைக்கும் டிபன் பாக்சை எடுத்து செல்ல மறந்து விடாதீர்கள். குறைந்த தூர விமானப் பயணங் களை தவிர்க்கலாம். ரயில், பஸ் பயணங்களை அதிகப்படுத்தலாம். கார்களில் செல்லுமிடத்திற்கு பஸ்சில் செல்ல முடியுமா என்று பார்க்கலாம். சைக்கிள்கள் அதிகம் ரோட்டில் தென்படவேண்டும். அது நமக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.


தவிர்க்க முடியாத பள்ளிக் கட்டணம்: பள்ளிக் கட்டணம், பால் ஆகியவை தவிர்க்க முடியாதவை தான். உங்கள் பிள்ளைகள் தனியார் பள்ளிகளில் படித்து, அந்த பள்ளியில் கட்டணங்கள் கூடி வரும் வேளையில், பெற்றோர் - ஆசிரியர் கழக மீட்டிங்குகளில், கூடிவரும் கட்டணங்களைப் பற்றி கூற மறக்காதீர்கள். அது அவர்களையும் இரண்டு பேர் கேள்வி கேட்கிறார்களே என்று யோசிக்க வைக்கும்.


வங்கி டிபாசிட்: அதுபோலவே வங்கியில் பிக்சட் டிபாசிட் போடும் போது எந்த வங்கி கூடுதலாக வட்டி தருகிறதோ, அந்த வங்கியில் சென்று போடவேண்டும். அது உங்களுக்கு அதிக வருமானத்தைத் தரும். அதிக வருமானம் உங்கள் அதிக செலவுகளுக்கு உதவும். பணவீக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்த யாரிடமும் எந்த மந்திரக்கோலும் இல்லை. வண்டியில் இரண்டு மாடுகளும் ஒன்றாக ஓடவேண்டும். இரண்டும் இரண்டு பக்கம் இழுக்கக்கூடாது. அதுபோலத்தான் துவக்கம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டும். நமது முன்னோர்கள் சிக்கனமாக இருந்து, நமக்கெல்லாம் நல்ல பாடங்கள் தந்து சென்றிருக்கின்றனர். அடுத்தவர் என்ன நினைப்பர் என்ற நினைப்பிலே நாம் பெரும்பாலும் அதிகம் செலவழிக்கிறோம். அதைத் தவிர்த்தாலே ஒரு பெரிய சேமிப்பு ஏற்படும். இதையெல்லாம் கடைபிடித்துப் பாருங்கள். உங்கள் பர்சும் கனமாகும், மனதும் இலகுவாகும். பர்சில் பணம் அதிகமானால் அதிகம் கோபப்படமாட்டீர்கள்.



கடன் வாங்கி முதலீடுகள் செய்யலாமா? : கடன் வாங்கி முதலீடுகள் செய்வதை தவிருங்கள். அதாவது, பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அல்லது தங்கத்தில் முதலீடு செய்ய என கடன் வாங்கி பலர் முதலீடு செய்து கொண்டிருக்கின்றனர். முன்பு இந்த வட்டி விகிதங்கள் குறைவு, முதலீடுகளில் வருமானங்கள் அதிகம் என்பதால், பலர் இதுபோல செய்து வந்தனர். தற்போது, கூடிவரும் வட்டி விகிதங்களில், குறைந்து வரும் பங்குச் சந்தையில் இதுபோன்று ஆர்பிடரேஜ் ஆப்பர்சூனிட்டி அதிகம் இல்லை. ஆதலால், இதுபோன்று செய்து கையை கடித்துக் கொள்ளாதீர்கள்.

கடல்நீரில் உப்பு வந்தது எப்படி?


வெப்பக்கோளமாக இருந்த பூமியில், பல லட்சக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து பெய்த மழையால் தான் கடல் உருவானது என்று கூறப்படுகிறது.

பாறைகளில் இருக்கும் உப்பு, மழைநீரால் கரைக்கபட்டு, ஆற்றுநீரால் அடித்து வரபட்டு கடலில் வந்து கலந்தது; அதன்பிறகு ஆவியாதல் முலம் கடலநீர் மேலே சென்றுவிட, உப்பு மட்டும் கடலிலேயே தங்கி விட்டது. இதுபோல் லட்சக்கணக்கான வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்றதால் கடலில் அதிகளவு உப்பு சேர்ந்து விட்டது என்றே கருதபட்டது.

ஆற்று நீரில் அதிகளவு இருப்பதோ, கால்சியம் மற்றும் பை-கார்பனேட் உப்பு. கடலில் அதிகளவு இருபது நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் சோடியம் குளோரைடு உப்பு. அதாவது அடிபடையில் ஆற்றுரில் உள்ள உப்பும், கடல்நீரில் உள்ள உப்பும் வெவ்வேறானவை. எனவே, கடலநீரில் காணப்படும் சோடியம் குளோரைடு உப்பு எங்கிருந்து வந்தது?

பூமி, முதலில் பாறைக்குழம்புக் கோளமாக எரிமலைகளுடன் இருந்தது. அதன்பின்னர் படிபடியாகக் குளிர்ந்ததால், பல்வேறு அடுக்கு பாறைகளுடன் புவி ஓடு உருவானது. பாறைக்குழம்பில் இருந்து பாறைத் தட்டுகள் உருவானபோது, நீர் தனியே பிரிந்து பூமிக்கு மேல் வந்ததால் தான் கடல் உருவானது.

ஆதிகாலத்தில் எரிமலைகளின் முலமாக பூமிக்குள் இருந்து சோடியம் குளோரைடு உப்புகள், வாயு வடிவில் பூமிக்கு மேல் வந்ததால் தான் கடலநீரில் அதிகளவு சோடியம் குளோரைடு உப்பு இருக்கிறது. இக்கருத்துக்கு ஆதாரமாக பாறைக்குழம்புக் கோளமாக இருக்கும் வியாழன் கிரகத்தின் துணைக்கிரகமான `இயோ’ விளங்குகிறது.

பூமியில் உள்ள எரிமலைகளை விட, இயோவின் மேற்பரப்பில் அதிக வெப்பமுள்ள எரிமலைகள் காணபடுகின்றன. இந்த எரிமலைகளில் இருந்து சோடியம் மற்றும் குளோரைடு உள்பட உப்பு முலபொருட்கள் வாயு வடிவில் பீய்ச்சியடித்துக் கொண்டு இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாகின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாரல் ஸ்ட்ரோபில் என்ற ஆராய்ச்சியாளர் இதைக் கண்டுபிடித்திருக்கிறார்.

1974-ம் ஆண்டு பாபிரவுன் என்ற ஆராய்ச்சியாளர், இயோவின் வாயு மண்டலத்தில் மெலிதான சோடியம் மேகங்கள் இருப்பதை தொலைநோக்கி முலம் கண்டறிந்து அறிவித்தார். ஆனால், அந்த அறிவிப்பு பல ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியபட வைத்தது. காரணம், இயோவின் மேற்பரப்பில் எங்குமே உப்பு படிவங்கள் இல்லை. முதன்முறையாக எரிமலைகளின் முலம் உப்பு வாயுக்கள் பீய்ச்சியடித்துக் கொண்டிருபதை டாரல் கண்டுபிடித்ததன் முலம், பல்வேறு புதிர்களுக்கு விடை கிடைத்திருக்கிறது.

அதிக வெப்பநிலையில் பாறைக்குழம்புக் கோளமாக இருக்கும் இயோவில், உப்பு எரிமலைகள் இருப்பதைபோல், நம் பூமியும் முதலில் பாறைக்குழம்புக் கோளமாக இருந்தபோது எரிமலைகளில் இருந்து சோடியம் குளோரைடு வெளிவந்தது தெளிவாகிறது. எனவேதான், கடல்நீரில் அதிகளவு சோடியம் குளோரைடு உள்ளது.

புத்திசாலி குழந்தைகள்...

தங்கள் குழந்தைகள் புத்திசாலிகளாக ஆக வேண்டும் என்று எல்லா பெற்றோர்களும் விரும்புகிறார்கள். முதல் மார்க் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

இதற்காக குழந்தைகளுக்கு ஆர்வத்துடன் பாடம் சொல்லிக் கொடுப்பது, கூடுதல் நேரம் படிக்க வைப்பது, டிசன் அனுப்புவது, யோகா வகுப்பிற்கு செல்லச் சொல்வது, தியானம் செய்ய வலியுறுத்துவது, ஆரோக்கியமான உணவுகளை தயாரித்துக் கொடுப்பது என விதவிதமான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.

இவற்றைவிட வீட்டில் சிறு நூலகம் இருந்தாலே குழந்தைகளின் ஆர்வம் இயல்பாகவே கல்வியின் பக்கம் திரும்பிவிடும் என்கிறது புதிய ஆய்வு. அமெரிக்காவின் நெவேடா பல்கலைக்கழகம் இதை கண்டுபிடித்துள்ளது.



20 ஆண்டு காலம் இதற்கான ஆய்வு நடந்தது. அப்போது ஒரு வீட்டில் குறைந்தபட்சம் 500 புத்தகங்கள் இருப்பின் குழந்தைகளின் ஆர்வம் புத்தகத்தின் பக்கம் திரும்புவது தெளிவானது. இதன் முலம் பெற்றோர் சிறந்த கல்வியாளர்களாக இருந்தால்தான் பிள்ளைகளும் சிறப்பாக படிப்பார்கள் என்ற நம்பிக்கை மாறி உள்ளது.

3 வருடம் மட்டுமே படித்த பெற்றோர் மற்றும் 16 ஆண்டு காலம் படித்த பெற்றோர் இருவரது வீடுகளிலும் சிறு நூலகம் ஏற்படுத்தி ஆய்வு செய்தபோது குழந்தைகளின் கல்வியில் பெறும் மாறுதல்கள் காணப்பட்டது. அதாவது நூலகம் இருக்கும் வீடுகளில் குழந்தைகளின் 3 1/4 வயதிலேயே புத்தகங்களின் பக்கம் கவனம் திரும்புவது கண்டு பிடிக்கப்பட்டது. கல்வித்தரமும் சராசரியாக உயர்ந்தது.

`இல்லம்தோறும் அறிவு விளக்கு ஒளிர வீட்டுக்கொரு நூலகம் வேண்டும்’ என்ற அண்ணாவின் வாக்கு உண்மையென நிபிக்கப்பட்டிருக்கிறது.

பறவைகள் நீண்ட தூரம் பறக்கும் ரகசியம்

பறவைகள் நீண்ட தூரம் பறக்கும் ரகசியம்


உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பறவைகள் இனப்பெருக்கத்திற்காகவும் சீதோஷ்ண நிலை காரணமாகவும், ஒவ்வொரு ஆண்டும் இடம் பெயர்கின்றன. இந்த இடப் பெயர்ச்சியின் போது அவை பல ஆயிரம் கி.மீ. தூரத்தை கடக்கின்றன. சில பறவைகள் தொடர்ந்து பல மணி நேரம் பறந்து இலக்கை அடைகின்றன. “பல ஆயிரம் கி.மீ., தூரம் தொடர்ந்து பறப்பதற்கான உடல் திறன், இப்பறவைகளுக்கு எப்படி கிடைக்கிறது…’ என்பது, பறவைகள் குறித்த ஆய்வாளர்களின் நீண்ட நாள் கேள்வியாக இருந்தது. இந்நிலையில், நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் பறவைகள் சக்தி பெற, “பெர்ரி’ பழங்களை அதிகமாக உண்ணுகின்றன என்ற புதிய தகவல் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள அமெரிக்க ரசாயன கழகம் நடத்திய தேசிய கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது. “மனிதர்களின் உடல் நலத்திற்கு சத்துக்கள் தரும் பழங்கள், காய்கறிகள் குறித்து நாங்கள் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளோம். இடப்பெயர்ச்சி செய்யும் பறவைகளும், அதிக சத்துக்கள் நிறைந்த உணவையே விரும்புகின்றன…’ என்று ரோட்தீவு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வு தலைவர் நவீன்டிராசீரம் கூறியுள்ளார். பெர்ரி பழங்களை உண்ணும் 12 பறவைகளை ரோட் தீவு, டின்னி பிளாக் தீவுகளில் நவீன்டிராசீரம் மற்றும் அவருடன் பணியாற்றுபவர்கள் சேகரித்தனர். இப்பறவைகள் அட்லாண்டிக் கடல் வழியாக பறக்கும் போது இடையே உள்ள தீவுகளில் இறங்கின. அப்போது பறவைகளின் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அளவு மற்றும் நன்கு பழுத்த நிலையில் உள்ள ஆரோவுட், வின்டர் பெர்ரி, பேபெர்ரி, சோக் பெர்ரி, எல்டர்பெர்ரி ஆகிய பழங்களின் பிக் மென்ட்களை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். பறவைகள் நீண்ட தூரம் பறக்கும் திறன் குறித்து நவீன்டிராசீரம் கூறிய தாவது:

மற்ற பெர்ரி பழங்களின் சராசரியை விட ஆரோவுட் பழத்தில் 650 சதவீதத்திற்கும் அதிகமான பிக்மென்ட்டும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் 150 சதவீதத்திற்கும் அதிகமாகவும் உள்ளன. இதனால் தான் பறவைகள் ஆரோவுட் பழங்களை அதிகமாக உண்கின்றன. இலையுதிர் காலத்தில் இடப்பெயர்ச்சி செய்யும் சில பறவைகள், தங்கள் எடையைப் போல மூன்று மடங்கு பெர்ரி பழங்களை உண்ணுகின்றன. ஒரு மனிதன் தினசரி 136 கிலோ சாப்பிட்டால் எந்த அளவு சக்தி கிடைக்குமோ அதைவிட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இடப்பெயர்ச்சி செய்யும் சில பறவைகள் கறுப்பு நிறத்திலும், ஆழ்ந்த பிக்மென்ட் மற்றும் உயர்வான ஆன்டி ஆக்சிடன்ட் கொண்ட பழங்களை விரும்புவதை, முன்னதாக விஞ்ஞானிகள் அறிந்திருந்தனர். ஆன்டி ஆக்சிடன்ட், நோய் எதிர்ப்பு சக்தியை தருவதுடன், பறவைகள் நீண்ட தூரம் பறப்பதற்கான சக்தியையும், உடல் வெப்பம் அதிகரிக்கும் சக்தியையும் தருகின்றன. இவ்வாறு நவீன்டிராசீரம் கூறியுள்ளார். பழங்களை தின்று கொட்டைகளை எச்சங்களாக வெளியேற்றுவதன் மூலம் பழம் தரும் தாவரங்கள் பல இடங்களில் பரவுகின்றன. இதன் மூலம் சக்தியளிக்கும் பழங்களை தரும் பெர்ரி இன மர வகைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உலகின் பல இடங்களில் அவை பரவ, இடப்பெயர்ச்சி செய்யும் பறவைகள் உதவுகின்றன.